வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை வடகொரியா வெற்றிகரமாக தடுத்துள்ளது என வடகொரிய அதிபர் பெருமிதம்.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் தினமும் உலக அளவில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி 1,11,81,818 பேர்களுக்கு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,92,023 உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,378 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவை ஊடுருவலை தடுத்தது குறித்து ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வடகொரிய அதிபர் பேசினார். அவர் கூறியதாவது, உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்த போதிலும், வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை வடகொரியா வெற்றிகரமாக தடுத்துள்ளது.
கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் பிரகாசமான வெற்றி பெற்றுள்ளது வடகொரிய. அதேசமயம் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுயநிறைவு அடைந்து விட்டதாக கருதாமல், மக்கள் அதிகபட்ச எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.