Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு ரஷ்ய நாடு மருந்து கண்டுபிடிப்பு !

Webdunia
திங்கள், 25 மே 2020 (22:39 IST)
சீனாவில் இருந்த உலக நாடுகளுக்கு கொரொனா பரவிய நிலையில், தற்போதுவரை சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் தொடக்கத்தில் ரஷ்யாவில் அதிகம் பரவாத நிலையில் இப்போது அங்கு அதிகளவில் பரவி வருகிறது.

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.  இதுவரை 3,500 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கொடூர நோயிக்கான தடுப்பூசி மற்றும் மருந்தைக் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவும் இதில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய நாட்டில் உள்ள பாவிபிராவிர் மருந்து நிறுவனம் அரேப்லிவிர் என்ற பெயரில் கொரொனா நோயாளிகளுகு ஒரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த மருந்து குறித்த மருத்துவ பரிசோதனைகள் 4 முதல் 8 வாரங்களுக்குள் முடிந்து விடும் என ரஷிய சுகாதார அமைச்சகத்தின் தலைமை சிறுநீரக மருத்துவரும் மருத்துவ ஆராய்ச்சிக்கு பொறுப்பேற்றுள்ள நிபுணருமான டிமிட்ரி புஷ்கர் தகவல் கூறியுள்ளார்.

அதில், இந்த மருந்துகள் ஆய்வு செய்யப்படவுள்ளது. ஒரு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்குள் இந்த மருந்து உருவாக்கப்படும் ஆனால் இதற்கான நாங்கள் பணியாற்ற வேண்டியதுள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments