லெபனான் நாட்டில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடிகுண்டு சம்பவம் தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
லெபனான் நாட்டில் உள்ள துறைமுக கிடங்கில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடி விபத்தில் சுமார் 73 பேர் பலியாகியுள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த விபத்து குறித்த காரணங்கள் என்னவென்று இன்னும் தெரியவில்லை என்று லெபனான் அரசு தெரிவித்து வருகிறது. இது தற்செயலான விபத்தா? அல்லது தீவிரவாதிகளின் சதியா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் லெபனான் நாட்டில் நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு விபத்து தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று அமெரிக்க ராணுவ தளபதிகள் தன்னிடம் கூறியதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இது போன்ற மிகப்பெரிய தாக்குதல் இதுவரை நிகழ்ந்ததில்லை என்றும் இது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் போல் தான் உள்ளது அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த சந்தேகத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது