ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்தார்.
ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் வில்லினூவ் என்ற நகரில் உள்ள ஒரு பூங்காவில், மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்துவைத்தார். அந்த இடத்திற்கு காந்தி சதுக்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பின்பு அந்த விழாவில் பேசிய ஜனாதிபதி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரோமைன் ரோலாண்டின் அழைப்பை ஏற்று 1931 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி வில்லினூவ் நகருக்கு வந்துள்ளார் என நினைவு கூர்ந்தார்.
இதனையடுத்து ஸ்லோவேனியா நாட்டுக்கு செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 17 ஆம் தேதி டெல்லி திரும்புகிறார்.