பிரான்சில் தான் வேலைப் பார்த்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரடெரிக் டெஸ்னார்ட் என்ற நபர் இன்டர்பர்ஃபும்ஸ் என்ற வாசனைத் திரவிய நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தில் அவர் வேலை பார்த்த போது மிகவும் சலிப்பாக உணர்ந்ததாகவும், அதனால் மன நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் தான் ஒரு முக்கியமான வாடிக்கையாளரை இழந்ததாகவும், அதனால் நிறுவனம் தன்னை பதவி இறக்கம் செய்தது. இதனால் நான் எதற்கும் லாயக்கற்றவன் என்ற நினைக்க ஆரம்பித்தேன்.
எனது மருத்துவர் அறிவுறுத்தலின் படி நான் 6 மாத காலம் விடுப்பு எடுத்துக்கொண்டேன். ஆனால் என்னை நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இதுபற்றி வழக்கு தொடர்ந்த டெஸ்னார்ட் இப்போது நீதிமன்றத்திடம் இருந்து நீதியும் பெற்றுள்ளது. அவருக்கு 40000 யூரோ (இந்திய மதிப்பில் 34 லட்சம்) இழப்பீடாக வழங்கவேண்டும் எனக் கூறியுள்ளது.