மொரிஷியஸில் கப்பல் மோதி டால்பின்கள் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொரிஷியஸ் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் வகாஷியோ என்ற எண்ணெய்க்கப்பல் பவளப்பாறைகளில் மோதியது. இதனால் கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டியதுடன், அந்த பகுதியில் சுமார் 40 டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கின.
கப்பல் மோதிய விபத்தில் டால்பின் இறந்ததாக குற்றம்சாட்டிய மக்கள் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும், டால்பின்கள் உயிரிழந்த விவகாரத்தில் நீதி வேண்டுமென போராட்டம் செய்ய தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் 2 டால்பின்களை உடற்கூறாய்வு செய்த மொரிஷியஸ் அரசு அவைகள் உடலில் காயங்கள் இருந்தாலும், எண்ணெய் கசிவுகள் இல்லை என கூறியுள்ளனர்.
ஆனால் அதை ஒப்புக்கொள்ள மறுத்துள்ள மக்கள் மற்ற டால்பின்களின் உடல்களை கூராய்வு செய்யும்போது சமூக ஆர்வலர்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.