Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு: இன்று தொடக்கம்..!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு: இன்று தொடக்கம்..!
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (10:52 IST)
எம்பிபிஎஸ் மாற்றம் பிடிஎஸ் படிப்புகளுக்கு முதலாம் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
2023 - 24 ஆம் கல்வி ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு சமீபத்தில் முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்தது. பொது பிரிவு கலந்தாய்வு ஆன்லைனிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 
 
இந்த நிலையில்  காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. ஆகஸ்ட் 24-ம் தேதி காலை 10 மணி முதல் 28-ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வுசெய்ய வேண்டும். 
 
ஆகஸ்ட் 29, 30-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 
 
ஆகஸ்ட் 31-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 
 
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி மாலை 5 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநர் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளியுங்கள்: டி.என்.பி.எஸ்.சி. விவகாரம் குறித்து டிடிவி தினகரன்..!