அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கதவு அசையாமல் இருப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக விண்கல்லை முட்டுக்கொடுக்க பயன்படுத்தியது வியக்க வைத்துள்ளது.
மிச்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் என்பவரிடம், 30 ஆண்டுகளாக இருக்கும் கல்லின் தன்மையை ஆராயுமாறு கொண்டுவந்து கொடுத்துள்ளார் ஒருவர். அந்த கல் ஒரு விண்கல் என்பது ஆரய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
1930-களில் மிச்சிகனில் உள்ள எட்மோர் எனும் இடத்தில் இருக்கும் விளை நிலத்தில் வந்து விழுந்த அந்த கல்லின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்.
பெரும்பாலான விண் கற்களில் 90% முதல் 95% இரும்பு இருக்கும். ஆனால் இந்த விண்கல்லில் 88% இரும்பும் 12% நிக்கலும் இருப்பது இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வு முடிவுகளை உறுதி செய்ய வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்டியூட் எனும் புகழ்பெற்ற அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது.