உலக நாடுகளிடையே ஏற்படும் போர்களை தடுக்க இந்திய பிரதமர் மோடியால் முடியும் என மெக்சிகோ அதிபர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இந்த 8 ஆண்டுகளில் பல நாடுகளுக்கும் பயணித்து இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தியுள்ளார். மேலும் பல நாட்டு தலைவர்களையும் இந்தியாவிற்கு வரவேற்று பல்வேறு உடன்படிக்கைகளை ஏற்படுத்தியுள்ளார். இதனால் உலக அரங்கில் பிரதமர் மோடி மிகவும் செல்வாக்கு வாய்ந்தவராக உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து பேசிய மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் “உலகில் போர்களை தடுத்து நிறுத்த இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட 3 உலகத் தலைவர்களை கொண்ட ஆணையத்தை உருவாக்கும் திட்டத்தை ஐ.நாவிடம் முன்மொழிய உள்ளேன். இவர்கள் மூவரும் வகுக்கும் திடங்கள் போர் மற்றும் பதற்ற சூழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என ஆழமாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.