Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே டோஸில் குணமாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன்; மெக்சிகோவிலும் அனுமதி!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (09:51 IST)
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி ஒரே டோஸில் கொரோனா எதிர்ப்பு தன்மையை உருவாக்கும் நிலையில் மெக்ஸிகோவில் இதற்கான அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பல நாடுகள் பல்வேறு விதமான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி சமீபத்தில் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு துறையால் அங்கீகரிக்கப்பட்டது.

மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலையில் இந்த தடுப்பூசி ஒரே டோசில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மெக்சிகோவும் அனுமதி அளித்துள்ளது. மெக்ஸிகோவில் ஏற்கனவே பைசர், கோவாக்சின், ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments