முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா, புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் அன்னி லீபோவிட்ஸுடனான தனது புதிய புகைப்பட தொகுப்பிலிருந்து சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் 61 வயதான அவர் உடல் எடையைக் குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.
அவரது இந்த மாற்றத்தைக் கண்ட சமூக ஊடகப் பயனர்கள், அவர் உடல் எடையை குறைக்க நீரிழிவு மருந்தான 'ஓசெம்பிக்' அல்லது அதுபோன்ற GLP-1 மருந்துகளை பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர்.
இந்த மருந்துகள் பசியை குறைக்கும் பக்கவிளைவுகளை கொண்டுள்ளன. எனினும், கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மூலமாகவும் அவர் இந்த மாற்றத்தை அடைந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
'ஓசெம்பிக்' என்பது நீரிழிவு நோய்க்காக அங்கீகரிக்கப்பட்ட மருந்து; இது அழகு அல்லது எடை குறைப்புக்கான குறுக்குவழியாக பயன்படுத்தப்படக் கூடாது என்பது மருத்துவ விதி.
மிஷெல் ஒபாமா, லீபோவிட்ஸின் 'Women' புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பிற்காக இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.