Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி - ட்ரம்ப் நட்பு முடிவுக்கு வந்தது! எதிரிகளானது ஏன்? - அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!

Advertiesment
Modi Trump friendship is over

Prasanth K

, வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (10:30 IST)

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிகளை தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

ஒரு பேட்டியில் பேசிய அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனிப்பட்ட முறையில் ஆழமான நட்பு இருந்தது. ஆனால் அது இப்போது மொத்தமாக முடிந்துவிட்டது என நினைக்கிறேன். இது அனைவருக்குமான பாடம். ட்ரம்ப்பை நம்பி ஏமாற வேண்டாம். 

 

ஒரு நல்ல தனிப்பட்ட உறவு சில விஷயங்களில் உதவக்கூடும். ஆனால் மோசமானவற்றில் இருந்து அது உங்களை பாதுகாக்காது. ராஜாங்க உறவு என்பது வேறு, தனிப்பட்ட நட்பு என்பது வேறு. அதனால்தான் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி முதல் மோடியின் அமெரிக்க பயணங்கள் வரை தலைப்புச் செய்திகளாக தொடர்ந்து வந்த இருவரது நட்பும் மோசமடைந்துள்ள நிலையில் இரு நாட்டு உறவுகளும் மோசமடைந்துவிட்டது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் காலத்துல சாக்லேட் கூட வாங்கி சாப்பிட முடியாது! அவ்ளோ வரிகள்! - பிரதமர் மோடி விமர்சனம்!