Webdunia - Bharat's app for daily news and videos

Install App

58 நாடுகள், 6,000-க்கும் மேற்பட்ட மக்கள், 3 பலி: குரங்கு அம்மை வீரியம்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (10:59 IST)
குரங்கு அம்மை வைரஸ் அதிகரித்து வருவதும், பரவலும் கவலை அளிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பேச்சு. 

 
ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, குரங்கு அம்மை வைரஸ் அதிகரித்து வருவதும், பரவலும் கவலை அளிக்கிறது. குரங்கு அம்மையால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்.
 
கடந்த 27 ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் குரங்கு அம்மை பாதிப்பு 77% அதிகரித்து இருக்கிறது. 85% பாதிப்பு ஐரோப்பாவில பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments