கொரோனாவால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது
சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகம் முழுக்க 1. 44 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுக்க கொரோனாவிலிருந்து 86.06 லட்சம் பேர் மீண்டனர் என்றும், உலகம் முழுக்க கொரோனாவிற்கு 6.04 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து மொத்தம் 38,33271 லட்சம் பேர் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 26,549 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதியானது என்றும் இதனால் மொத்தம் பிரேசிலில் 2075246 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மெக்சிகோவில் 7615 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி என்றும் மெக்சிகோவில் கொரோனாவிற்கு 578 பேர் மரணம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,077,864 என்றும், பலியானோர் எண்ணிக்கை 26,828 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது