Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு? நாசாவின் அதிர்ச்சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:52 IST)
நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சந்திராயன் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ஆகியவை இணைந்து அனுப்பப்பட்டிருந்தது 
 
இந்த சந்திராயன் கடந்த மாதம் ஏழாம் தேதி நிலவில் தரையிறங்கும் போது திடீரென தகவல் தொடர்பை இழந்தது. இதனை அடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவும், நாசாவும் தீவிரமாக முயற்சி செய்தும் விக்ரம் லேண்டரில் இருந்து எந்தவிதமான சிக்னலும் பெற முடியவில்லை 
 
மேலும் விக்ரம் லேண்டருக்கு உரிய 14 நாள் காலக்கெடு முடிவடைந்து விட்டதால் விக்ரம் லேண்டர்ஃப் நிரந்தரமாக செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா என்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அது குறித்த புகைப்படங்களை அனுப்பியுள்ளது 
 
சந்திராயன்-2வில் இணைத்து அனுப்பப்பட்டிருந்த விக்ரம் செப்டம்பர் ஏழாம் தேதி நிலவில் உள்ள ஒரு உயரமான, மென்மையான, சமவெளியில் தரையிறங்க முயன்றதாகவும் விக்ரமுக்கு இது ஹார்ட் லேண்டிங் ஆக மாறி விட்டதாகவும், தற்போது விக்ரம் லேண்டர் எங்கே உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளது. இருப்பினும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க தங்களது விண்கலம் முயற்சி செய்யும் என்றும் நாசா தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments