நேபாள நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி எடுத்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் சர்மாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் நடத்தியது
மேலும் இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். நாடாளுமன்றத்தை கலைப்பது அரசியல் அமைப்புக்கும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் பிரதமர் ஒலி மேற்கொண்ட நடவடிக்கையை உச்சநீதிமன்றத்தை ஆதரிக்காது என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கருத்து தெரிவித்து இருந்தார்
இந்த நிலையில் அவரது நம்பிக்கைக்கு உறுதி அளிக்கும் வகையில் சற்றுமுன் நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து செல்லாது என அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மேலும் 13 நாட்களுக்கு எம்பிக்களுக்கு மீண்டும் பதவி பதவி வழங்கி நேபாள நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது
கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நேபாள நாடாளுமன்றம் அழைக்கப்படுவதாக அறிவித்த நிலையில் தற்போது கலைக்கப்பட்டது செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நேபாள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது