Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவை கண்டிக்கும் நிறுவனங்கள்! – நெட்ப்ளிக்ஸ், கொகோ கோலா செயல்பாடுகள் நிறுத்தம்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (09:04 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் அதை கண்டிக்கும் விதமாக பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வருகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

மேலும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன. முன்னதாக ஆப்பிள், சாம்சங், ஐபிஎம், மெக் டோனல்டு, ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தன.

தொடர்ந்து தற்போது பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ரஷ்யாவில் தனது ஒளிபரப்பை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. கூல்ட்ரிங்க்ஸ் நிறுவனமான கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவம்..!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்..!

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

‘ஆபரேஷன் சிந்தூர்’.. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.. போர் தொடங்கிவிட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments