உலகின் முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது கேமிங் துறையில் காலடி எடுத்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
நெட்வொர்க் நிறுவனம் கேமிங் என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்த முடிவு செய்ததாகவும் இதற்காக தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
நெக்ஸ்ட் கேம்ஸ் என்ற மொபைல் கேம்ஸ் நிறுவனத்தை 72 மில்லியன் டாலர் கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் வர்த்தக சரிவை தடுத்து நிறுத்தவும் கேமிங் துறையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது
கேமிங் துறையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வருமானத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.