நியூஸிலாந்தில் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவது பல நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கி உள்ளதோடு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடையும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறாக தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்துவதை எதிர்த்து கனடாவில் ட்ரக் ட்ரைவர்கள் சாலையை மறித்து ட்ரக்கை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுக்கவே கனடா பிரதமர் தலைமறைவாகும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது நியூஸிலாந்து டிரைவர்களும் இதே முறையிலான போராட்டத்தை பின்பற்றியுள்ளனர். ட்ரக்குகளை சாலைகளை மறித்து நிறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.