பிரிட்டானில் கைது செய்யப்பட்ட இந்திய தொழிலதிபர் நீரவ் மோடி ஏற்கனவே 9 முறை தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 10வது முறையாக அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 6,500 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடி பிரிட்டனில் தங்கியுள்ளார்.
அதன் பிறகு சிபிஐ அளித்த புகாரின் அடிப்படையில் பிரிட்டன் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் லண்டன் நீதிமன்றத்தில் தன்னை விடுவிக்க வேண்டும் என ஜாமீன் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது அவரது பத்தாவது ஜாமீன் மனு என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் வெளியே வர முடியாத நிலையில் இருக்கும்போது விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.