வடகொரிய அதிபர் கிம் விமானப்படையினர் மேற்கொண்டிருக்கும் போர் ஒத்திகையை நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார்.
வடகொரியாவின் விமானப்படையினர் மேற்கொண்டிருக்கும் போர் ஒத்திகையை, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, போர் ஒத்திகையில் ஈடுப்பட்ட வீரர்களோடு கலந்துரையாடி விட்டு வந்தார் என அந்நாட்டு தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்கொரியாவும் அமெரிக்காவும் போர் ஒத்திகையில் ஈடுபடுவதாக் இருந்த நிலையில் வடகொரியாவில் பாராசூட் படையணி வீரர்கள் கடந்த சில தினங்களாக தீவிர போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போர் ஒத்திகையை கடந்த 3 நாட்களில், 2 முறை அதிபர் கிம் ஆய்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியா - அமெரிக்கா போர் ஒத்திகை தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையிலும் வடகொரியா இவ்வளவு தீவிரமாக போர் பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.