பல உயரினங்கள் கடலின் ஆழத்தில் ஆக்டோபஸ்களுக்கு என்றே தனி நகரம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று இதயங்களையும் எட்டு கைகளையும் உடைய ஆக்டோபஸ் சுமார் 300 வெவ்வேறும் இனங்களை கொண்டுள்ளது. சமீபத்தில் கடலுக்கு அடியில் ஆக்டோபஸ் நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அலஸ்கா பெசிஃபிக் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டிபிடித்துள்ளனர். Octopus Tetricus என்னும் இனத்தை சேர்ந்த ஆக்டோபஸ்கள் வாழும் நகரத்தை கடலுக்கு அடியில் கண்டுள்ளனர்.
இந்த ஆக்டோபஸ் நகரத்திற்கு Octlantis என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரம் கடலில் 10 முதல் 15 மீட்டர் ஆழத்திலும், 18 x 4 சதுர மீட்டர் பரப்பளவிலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.