தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் திரிபு குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தென் ஆப்பிரிக்கா சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா ஒமிக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் நான்காவது அலையாக ஒமிக்ரான் பரவல் உள்ளது என தெரிவித்தார். இதனிடையே தற்போது தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் திரிபு குழந்தைகளுக்கு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனாவின் முதல் மூன்று அலைகளின் போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை. இதனால் தற்போது அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் 15 முதல் 19 வயது வரை உள்ளவர்களும் பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும் ஒமைக்ரான் திரிபால் வயதானவர்கள் பாதிக்கப்படும் போது அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும் என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.