கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி கோடிக்கணக்கானவர்கள் வாட்டி வதைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த நிலையில் திடீரென ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது
தென்னாப்பிரிக்காவில் பரவிய இந்த ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக ஹாங்காங் பிரேசில் சவுதி அரேபியா அமெரிக்கா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது இந்த நிலையில் இன்று காலை முப்பத்தி எட்டு நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் அறிவித்த நிலையில் தற்போது 59 நாடுகளில் சுமார் 3,000 பேருக்கு வைரஸ் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
அதிகபட்சமாக பிரிட்டனில் 817 பேர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல நாடுகளில் மீண்டும் லாக்டவுன் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.