Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (07:34 IST)
உலக அளவில் அமெரிக்கா தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 70,067 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 918 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 22,79,900 பேர் குணம் அடைந்தனர் என்பதும், இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் 7,06,138 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,32,72,847 பேர் இதுவரை பாதிப்பு என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 8,05,907 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 56 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
 
அமெரிக்காவை அடுத்து பிரேசில் நாட்டில் 3,582,698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 114,277 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments