கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் சரிந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் பிளஸ் நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதுகுறித்து ஒபெக் பிளஸ் நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கச்சா எண்ணெய் உற்பத்தி கணிசமாக குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் உலக பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமாக்ம் என உலக நாடுகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளன
கச்சா எண்ணெய் உற்பத்தி கணிசமாக குறைத்தால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் இதனால் பல நாடுகள் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
ஒபெக் பிளஸ் நாடுகளின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே அதிகமான அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி கைவசம் வைத்திருப்பதால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது