Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இரண்டாவது அலை ஆபத்து நாடுகள்! – பட்டியல் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (08:07 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கியுள்ள நிலையில் பல நாடுகளில் இரண்டாவது அலையாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் பரவ் தொடங்கிய கொரோனாவால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் பல நாடுகளில் கொரோனா குறைந்ததால் ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த நாடுகளின் பட்டியலில் ஏற்கனவே கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, ஈரான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளது.

இதுதவிர உக்ரைன், வங்காளதேசம், ஸ்வீடன், பிரான்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இரண்டாம் அலை பாதிப்பிற்கு வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments