இந்தியா – சீனா இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் சீனா பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சீனாவின் அத்துமீறலை புறக்கணித்து வரும் இந்தியா தனது எல்லையில் கட்டுமான பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மறுபுறம் பாகிஸ்தானும் தன் பங்கிற்கு எல்லையில் பிரச்சினைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் ஏவுகனை தளக்கள் அமைக்க சீனா உதவி செய்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தானின் கையை வலுப்படுத்த பின்னின்று சீனா செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இரு எல்லை நாடுகளும் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.