உலகில் பயங்கரமான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் போதிய ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதாக கடும் விமர்சனம் செய்தார்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 48 பக்கம் ஆவணங்களை அவர் வெளியிட்டார். அதில் சீனா ரஷ்யா ஆகிய நாடுகளில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் இந்த பட்டியலில் பாகிஸ்தான் இல்லாத நிலையில் பாகிஸ்தானை அபாயகரமான நாடாக ஜோ பைடன் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான்கான் இது குறித்து பதிலளித்த போது அமெரிக்காவை போல் எந்த நாட்டின் மீதும் பாகிஸ்தான் போர் தொடுக்கவில்லை என்று தெரிவித்தார்