Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..

Arun Prasath
வெள்ளி, 8 நவம்பர் 2019 (12:56 IST)
பாகிஸ்தான் பிரதமர், கர்தார்பூருக்கு வரும் இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என கூறிய நிலையில் அந்நாட்டின் ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில் தனது கடைசி வாழ்நாளை கழித்தார். இதனை தொடர்ந்து அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டது. இந்த குருத்வாராவுக்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சீக்கியர்கள் சென்று வழிபட வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என கோரி வந்தனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவையும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீக்கியர்கள் விசா இன்றி சென்று வர வழிவகுக்கிறது.

குருநானக்கின் 550 ஆவது பிறந்தநாளையொட்டி வருகிற சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், இந்திய பிரதமர் மோடியும் திறந்துவைத்தனர். இதற்கு கட்டணமாக சீக்கியர்கள் ரூ.1400 செலுத்த வேண்டும்.
இந்நிலையில் சமீபத்தில் இம்ரான் கான் சீக்கியர்களுக்கு கர்தார்பூர் வர பாஸ்போர்ட் தேவையில்லை என அறிவித்தார். மேலும் அடையாள அட்டைகளே போதுமானது என கூறினார். இதனை தொடர்ந்து இம்ரான் கானின் இந்த முடிவிற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்தார்பூருக்கு செல்லும் முதல் இந்திய குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments