Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை பதவியிறக்கும் சதி வேலையில் அமெரிக்கா? இம்ரான் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (11:42 IST)
இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சி அமளி செய்தது. அதன் விளைவாக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் இம்ரான்கான் கட்சிக்கு ஆதரவளித்து வந்த எம்.க்யூ.எம் கட்சி தற்போது தனது ஆதரவை எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவையான நிலையில் எம்.க்யூ.எம் ஆதரவால் எதிர்கட்சி 177 இடங்களை கையில் வைத்துள்ளது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்படும் என பேச்சு எழுந்துள்ளது.
 
இதற்கிடையே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டு சதி காரணமாகவே எதிர்க்கட்சிகள் தன் மீது இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாக குற்றம்சாட்டினார் இம்ரான் கான். இது தொடர்பான அமெரிக்காவின் கடிதத்தை தனது கட்சி எம்பி.க்களிடம் காட்டி விளக்கம் அளித்தார் அவர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments