பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் தெரீக் – இ இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள பிரதமர் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானில் போதிய நிதி இல்லை என்ற காரணத்தால் தனக்கென்று வழங்கப்பட்ட அலுவலகத்தை நிராகரித்து விட்டு, அரசு கஜானாவில் ரூ.185 கோடியை மிச்சம் பிடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.
இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் மக்களின் வரிப்பணம் வீணாவது தடுக்கப்படுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசுக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டுக்கும் உலக அளவில் நன்மதிப்பு ஏற்படப்போவது நிஜம்.