இந்தியா அமெரிக்கா மத்தியில் ஆயுதம் தாங்கி ஆளில்லா விமான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையே சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பரிசிலணையில் இருந்தது. அதனை நிறைவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனால் பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்துக்கு தனது ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளது.
ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது மோதலுக்கான வாய்ப்பின்மையை குறைக்கலாம். ஏனெனில் இது, ராணுவத்தின் தவறான செயல்களை ஊக்குவிக்கலாம் என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவை அனைத்தும் தகுந்த அமைப்பின் வழிகாடுதல்களுடன் நடக்கிறதா என சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் அரசை அமெரிக்கா நேரடியாக எச்சரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.