2018ஆம் ஆண்டின் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் உலக அழகி போட்டி மியான்மர் நாட்டில் நடந்தது. இதில் இந்தியா உள்பட உலகின் பல நாட்டு அழகிகள் பங்கு பெற்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்திய அழகி மீனாட்சி சவுத்ரி மற்றும் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா ஆகியோர் தகுதி பெற்றனர்.
இந்த போட்டியில் உலக அழகியாக பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸா தேர்வு செய்யப்பட்டார். தன்னுடைய பெயர் தான் வெற்றியாளர் என்ற அறிவிப்பை கேட்டதும் துள்ளி குதித்த அழகி கிளாரா, மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றதால் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது.
உலக அழகியாக முடிசூட்டப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய கிளாரா, 'தான் முதல் பணியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை சந்திக்கவிருப்பதாகவும், அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கு முன்மாதிரியாக அவர் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் போவதாகவும் கூறினார்