தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த இரு வாரத்திற்கும் முன் கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை அவரது பெற்றோர் அடக்கம் செய்ய மறுத்து வீட்டிலேயே வைத்துள்ள சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நாட்டில் வசித்து வந்த தம்பதியர் அங்குள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொலம்பியா நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். அவர்களின் மகன் அலெக்சிஸ்( 20)ஆவார். கடந்த சில ஆண்டுகளாக கொலம்பியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு அலெக்சிஸ் மற்றும் அவரது நண்பர் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பகுதியில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் திடீரென்று அலெக்சிஸை சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
டிசம்பர் 10 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்திற்குப் பிறகு மகனின் சடலத்தைப் புதைக்காமல் தினமும் தன் மகன் வருவான் என அவரது பெற்றோர் பிராத்தனை செய்து வருகின்றனர்.
அப்பெட்டி உரிய முறையில் பாதுகாத்து வருவதால் துர்நாற்றம் வீசாது எனவும் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்று அலெக்சிஸ்ன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.