பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் உலகப்பிரசித்த ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான இந்த கோபுரத்தைக் காண வருடம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் ஈபிள் கோபுரத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்று, அதன் மது அருந்திவிட்டு, இரவில் உச்சி கோபுரத்திற்குச் சென்று அங்கேயே உறங்கியதாகக் கூறப்படுகிறது.
அடுத்த நாள் காலை 9 மணிக்கு ஈபிள் கோபுர பாதுகாவலர்கள் அதை திறக்கும்போது, 2 பேர் உறங்கிக் கொண்டிருப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களின் விசாரிக்கையில், போதையில், இரவில் அங்கேயே உறங்கியதாகக் கூறினர். பின்னர், இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.