Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் புதின்

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (22:10 IST)
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில்,  இன்று உக்ரைனுக்கு அதிபர் புதின் திடீரென்று நேரில் சென்று பார்வைட்யிட்டார்.
 

உக்ரைன் நாட்டின் மீது அண்டை நாடான ரஷியா கடந்தாண்டு போர் தொடுத்தது. இந்தப் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்களும் அப்பாவி மக்களும் பலியாகியுள்ள நிலையில், ஓராண்டைக் கடந்து இப்பொர்ர்  இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் படை மற்றும் பணபலமிக்க ரஷியாவுக்கு எதிராக, உக்ரைன் நாட்டிற்கு,  அமெரிக்கா, மற்றும் நேட்டோ கூட்டமைப்பு நிதியுதவி மற்றும் ஆயுதத் தளவாட உதவிகள் அளித்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன், ஜாபோர்ஷியா ஆகிய பகுதிகளைக் கடந்தாண்டு ரஷியா கைப்பற்றிய நிலையில்,  அதை தங்கள் நாட்டுடன் ரஷியா இணைத்துக் கொண்டது,

ஆனால், இதை உல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்த சூழலில், ரஷிய அதிபர் புதின் ரஷிய ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள  லுஹான்ஸ்க் மற்றும் கெர்சன் ஆகிய மாகாணங்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது, தற்போதைய நிலவரம் மற்றும் ராணுவ வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிற்பகல் 1 மணி வரை வெளுத்து கட்டப்போகும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இது நம்ம காலம்.. எறங்கி ஆடு கபிலா! ட்ரம்ப் வெற்றியால் எகிறிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் வரும்: ராகுல் காந்தி

திருமணம் செய்து கொண்ட ஆதீனம்? விதிமுறைகள் படி சரியா? - ஆதீனம் தந்த விளக்கம்!

போராட்டம் தொடரும்.. தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன்: கமலா ஹாரீஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments