இங்கிலாந்து அரசராக சார்லஸ் பதவியேற்கும்போது அவரது மனைவி கமிலா ராணி என அழைக்கப்பட வேண்டும் என தற்போதைய ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் மக்களாட்சி முறையிலான ஆட்சி நடந்து வந்தாலும் ராஜ குடும்பத்தினருக்கான மரியாதை மற்றும் அதிகாரமும் தொடர்ந்து இருந்து வருகிறது. இங்கிலாந்து ராணியாக எலிசபத் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவரது 70வது ஆண்டு ஆட்சியை இங்கிலாந்து பிளாட்டினம் ஆண்டாக கொண்டாடியுள்ளது. அதையொட்டி மரங்கள் நடுவதை அதிகரிக்கும்படி இளவரசர் சார்லஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதை முன்னிட்டு ராணி எலிசபத் வெளியிட்ட செய்தி குறிப்பில், இளவரசர் சார்லஸ் அரசராக பதவியேற்கும்போது அவரது மனைவி கமிலா ராணி என அழைக்கப்பட வேண்டும் என ராணி எலிசபத் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் தனது ராணி பதவியிலிருந்து எலிசபத் ஓய்வு பெற உள்ளாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.