Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் !அங்கீகரித்தார் இலங்கை சாபாநாயகர்

Advertiesment
Ranil Wickremesinghe
, ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (15:40 IST)
இலங்கைக்கு இன்னும் நான்தான் பிரதமர் என்றும் அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபர் உள்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளதால் இலங்கை அரசியலில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருந்த நிலையில் இப்போதைய நிலவரப்படி இன்று பிற்பகல் வேளையில்  இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரூ ஜெயசூர்யா, ரணில் விக்கிரமசிங்கை பிரதமராக அங்கீகரித்து தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருகிறார்.
கடந்த இரு நாட்களில் இலங்கையில் நடந்த அரசியல் விவரம் பின்வருமாறு: 
 
இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை விடுதலை கட்சி மற்றும் ஒருங்கிணைந்த தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் வெற்றி பெற்று இணைந்து ஆட்சி அமைத்தது. சிறிசேனா அதிபராகவும், ரணில் விக்ரமசிங்கே பிரதமாகவும் பதவியேற்றனர். முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே தோல்வியடைந்தார்.
 
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதனனயடுத்து சிறிசேன கட்சியின் அரசில் இருந்து ராஜபக்சே கட்சி சில நாட்களுக்கு முன் திடீரென விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த அதிரடியாக ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக ராஜபக்சேவை சிறிசேனா பிரதமர் ஆக்கினார்.
 
ரணில் விக்கிரமசிங்கே தன்னிலை விளக்கம்:
Ranil Wickremesinghe
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரணில் விக்ரமசிங்கே,' இன்னும் இலங்கைக்கு நான்தான் பிரதமர். நான் பிரதமராக நீடிக்கின்றேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி என்னை நீக்க அதிபர் உள்பட யாருக்கும் அதிகாரம் இல்லை. ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது மட்டுமின்றி ஜனநாயக விரோத சதிச்செயல் என்று கூறியுள்ளார். இதனால் இலங்கையின் உண்மையான பிரதமர் யார்? என்ற குழப்பத்தால் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 
 
நேற்று நாடாளுமன்றம் முடக்கம் ...?
Ranil Wickremesinghe
நேற்றுக்கு முன்தினம் இலங்கை அரசியல் திடீர் திருப்பமாக பிரதமராக பதவியில் இருந்த ரணில்விக்கிரமசிங்கே பதவியில் இருந்து விலக்கப்பட்டதாகவும் புதிய அதிபராக முன்னாள் பிரதமர் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதாகவும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா, ராஜபக்சேவுக்கு பதவி ஏற்க ஆதரவு அளிப்பதாகவும்  மின்னல் போல செய்திகள் வெளியானது.
 
இதை உறுதி செய்யும் விதமாக நேற்று ரணீல்விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தை கூட்டி தன் கட்சியின் பலத்தை நிரூப்பிக்க முயன்ற போது,அதிபர் சிரிசேனா நாடாளுமன்றம் நேற்று பகல் ஒருமணி முதல் நவம் 16 வரை முடக்கப்படும் என பகிரங்கமாக அறிவிப்பு விடுத்தார்.
 
என்னை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை !!!
Ranil Wickremesinghe
உள்நாட்டு அரசியல் சதி காரணமாக தனக்கு பெரும்பான்மை இருந்தும் கூட  ரணில் விகிரமசிங்கேவால்  எதுவும் செய்ய இயலாமல் போனது .ஏனென்றால் நம் இந்திய நாட்டைபோல இலங்கையிலும் அதிபரை ( குடியரசு தலைவர் மாதிரி) விட பிரதமருக்கு தான் அதிகாரம் அதிகம்.
 
இந்நிலையில் ராஜபக்‌ஷே பிதமராக அறிவிப்பு வெளீயானாலும்,நான் தான் பிரதமர் என்னை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறிவந்தார் .
 
ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் என சாபாநாயகர் அங்கீகாரம்:
Ranil Wickremesinghe
இந்நிலையில் தற்போது நிலவரப்படி இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக நீடிப்பதாக சபாநாயகர் கரூ ஜெயசூர்யா இன்று அதிகார்வ பூர்வமாக அறிவித்துள்ளார்.ஏற்கனவே ராஜபக்சேவை புதிய பிரதமராக நேற்று முந்தினம் அறிவித்திருந்த நிலையில் தற்போது சபாநாயகர் ஜெயசூர்யா ரணில் விக்கிரமசிங்கை பிரதமராக அங்கீகரித்திருப்பது இலங்கையில் பலத்த அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோ சாரி... ரஜினியை சந்தித்த முரசொலி ஆசிரியர்