ரஷ்ய ராணுவ படைகள், உக்ரைன் மீது 80 நாட்களுக்கு மேலாக தொடந்து போரிட்டு வருகின்றனர். இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்திய ஆளு நர் செர்ஹ் ஹைடாய் சமீபத்திய ரஷியா நடத்திய தாக்ககுதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சுவிட்சர் லாந்தில் நடந்த உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில், இணைய வழி பங்கேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி கூறியதாவது: போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துப் பேசத் தயார். உக்ரைன் மக்களை ரஷிய படைகள் கொன்று வருகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவு ஏற்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.