Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷி சுனக் கட்சி படுதோல்வியை சந்திக்கும்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு..!

Siva
வெள்ளி, 5 ஜூலை 2024 (07:11 IST)
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து  கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அமோக  வெற்றி பெறும் என்றும், கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 410 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு என்றும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த கருத்து கணிப்பு பலிக்கும் பட்சத்தில் பிரிட்டனில் 14 ஆண்டு  கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் என தெரிகிறது.
 
பிரிட்டனில் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று ஒரே நாளில் தேர்தல் நடந்தது.  ஆட்சியை பிடிக்க 326 இடங்களில் வெல்ல வேண்டும் எனும் நிலையில் தொழிலாளர்  கட்சிக்கு கருத்து கணிப்பு சாதகமாக உள்ள நிலையில் கருத்துக்கணிப்பு சரியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
பிரிட்டன் தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை  விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments