Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் பாலியல் சீண்டல்கள்: செயலிழந்த ரோபோ சமந்தா!!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (11:06 IST)
உலக நாடுகள் சிலவற்றில் பாலியல் ரோபாக்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று தொடர் பாலியல் சீண்டல்களால் செயலிழந்துள்ளது.


 
 
ஆஸ்திரிரேலியாவில் தொழில்நுட்ப கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சமந்தா என பெயரிடப்பட்டுள்ள ஒரு பாலியல் ரோபோவும் காட்சி பொருளாக வைக்கப்பட்டது.
 
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரோபோ வடிவமைப்பாளர் செர்ஜியோ இதனை வடிவமைத்துள்ளார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ.
 
கண்காட்சியில் பலர் இந்த ரோபோவை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியதால் இந்த ரோபோ செயலிழந்துள்ளதாக இதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது மக்களுக்கு ரோபோக்களின் தொழில்நுட்பம் இன்னும் புரியவில்லை. இதுவே இந்த ரோபோ செயலிழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
 
அதோடு, பாலியல் ரோபோக்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மாற்றாக இருக்கும். இனி எந்த பெண்களும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்