பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள ரஷ்யா, அந்நிறுவனத்தை ரஷ்யாவில் தடைசெய்துள்ளது
பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. அதேபோல் இன்ஸ்டாகிராமும் இந்த பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை ரஷ்யாவில் துண்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அரசின் ஆதரவு செய்திகளை பயனர்களை ஃபேஸ்புக் கட்டுப்படுத்துகிறது என்றும், உக்ரைன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் வன்முறகி பதிவுகளை பேஸ்புக் அனுமதிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது