Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுக்ரேனின் மேரியோபோலை கைப்பற்றியது ரஷ்யா!

யுக்ரேனின் மேரியோபோலை கைப்பற்றியது ரஷ்யா!
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (14:08 IST)
யுக்ரேனின் மேரியோபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 

 
யுக்ரேனில் ரஷ்யப்படையினரால் முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மேரியோபோலில் உள்ள அசோவ்ஸ்டல் ஆலையை முற்றுகையிடும் திட்டத்தை ரத்து செய்யுமாறு தனது ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதற்கு பதிலாக அந்த ஆலை பாதுகாப்பாக சீல் வைக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறியுள்ளார்.
 
கடைசியாக அங்கு உள்ள யுக்ரேன் படையினர் அந்நகரின் மிகப்பெரிய எஃகு ஆலையில் தஞ்சமடைந்துள்ளனர், அங்கு பொதுமக்கள் சுமார் 1,000 பேர் மோசமான நிலையில் உள்ளனர். புதின் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு இருவரின் உரையாடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த உரையாடலில் அசோவ்ஸ்டல் ஆலைக்கு சீல் வைக்க புதின் உத்தரவிட்டார்.
 
மேலும், ரஷ்யப் படையினர் மேரியோபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக, செர்கேய் ஷோய்கு தெரிவித்துள்ள நிலையில், அதற்காக பாதுகாப்பு அமைச்சரை புதின் பாராட்டியுள்ளார். 2,000க்கும் மேற்பட்ட யுக்ரேனிய படையினர் அந்த ஆலையில் இருப்பதாக புதினிடம் ஷோய்கு முன்னர் கூறியிருந்தார். அந்த ஆலையில் விரிவான பதுங்கு குழி உள்ளது.
 
அங்குள்ள யுக்ரேன் படையினர் தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புகளைக் கொண்ட அசோவ் பட்டாலியன் மற்றும் யுக்ரேனிய கடற்படையினர் ஆவர். ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக வாரக்கணக்கில் எதிர்த்து வருவதற்காக யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியால் அப்படையினர் முன்பு பாராட்டப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

#Breaking; என் காரை எடுத்து போங்க.. ஆனா அங்க மட்டும் போகாதீங்க! – எடப்பாடியாரிடம் பேசிய உதயநிதி!