Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடைக்கு மேல் தடை வாங்கும் ரஷ்யா..! – சீனா, வடகொரியா சாதனையை முறியடித்தது!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (11:04 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உலகிலேயே அதிகமான தடை வாங்கிய நாடாகவும் ரஷ்யா மாறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

முன்னதாக சீனா, வட கொரியா போன்ற நாடுகள் மீது உலக நாடுகளின் கட்டுப்பாடுகளை மீறியதாக பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போது ரஷ்யா மற்ற நாடுகளை விட அதிகமான தடைகளை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகளிடம் அதிகமான தடையை பெற்ற நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளதாக வணிக, தூதரக ரீதியிலான தடைகளை கவனிக்கும் கேஸ்டல்லம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments