ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் துபாயில் உள்ள ஒட்டலில் 6வது மாடலில் தங்கியிருந்தார். அவருடைய அறைக்கு அருகில் இருந்த அறையில் தங்கியிருந்த அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் மாடல் அழகியின் அறைக்கு அத்துமீறி நுழைந்து தனது ஆசைக்கு இணங்கும்படி கத்தியை காட்டி மிரட்டியுள்ளாராம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாடல் அழகி, அந்த தொழிலதிபரிடம் இருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக 6வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவரது ஸ்பைனல் எலும்பு சேதம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அந்த அமெரிக்க தொழிலதிபர் அவசர அவசரமாக விமான நிலையம் சென்று துபாயில் இருந்து தப்பிவிட்டதாகவும், அவரை பிடிக்க அமெரிக்க போலீசாரிடம் துபாய் போலிசார் நாடியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.