Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா: தனி மருத்துவமனை ஒதுக்கீடு

சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா: தனி மருத்துவமனை ஒதுக்கீடு
, வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (07:58 IST)
சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்பட பல விவிஐபிக்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களும் இந்த 150 பேர்களில் ஒருவர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும்
 
இதனை அடுத்து சவுதி அரேபிய மன்னர் குடும்பத்திற்காக உயர்தர சிகிச்சை அளிக்கக் கூடிய தனி மருத்துவமனை ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த மருத்துவமனையில் 500 பேர் சிகிச்சை அளிக்கும் வகையில் வசதி இருந்தபோதிலும் மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேர்களுக்கு மட்டுமே தனியாக இந்த மருத்துவமனை ஒதுக்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் வட்டாரங்கள் கூறுகின்றன. சவுதி அரேபியாவில் ஏற்கனவே கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3000 ஆக உள்ளது என்பதும் இதுவரை கொரோனா வைரஸுக்கு 44 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் மெக்கா மதினா போன்ற புனிதத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால் முதல் முறையாக ஹஜ் புனித யாத்திரையும் நடக்குமா என்ற கேள்விக் குறியாக உள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தினர் 150 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள செய்தியால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கின்போது இயங்கிய மசாஜ் சென்டர்: போலீசை பார்த்ததும் தப்பித்து ஓடிய பெண்கள்