நாசா வின்வெளி ஆய்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிரிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
விண்வெளி பற்றி ஆராய்ச்சி செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையம் ஆகும்.
நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது, சூரியனை புகைப்படம் எடுப்பது, சூரியக் குடும்பக் கோள்கள் ஆராய்ச்சி உள்ளிட்ட பலவற்றின் தகவல் அளிப்பதுடன் பூமிக்கு ஏதும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது நாசா.
இந்த நிலையில், நாசாவின் சமூக வலைதளப் பக்கத்தில் எமோஜி மாதிரி சூரியன் சிரிப்பதைப் போன்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளாது.
சூரியனுக்கு மேல் உள்ள 3 துளைகள் கனோனல் துளைகள் எனவும் இதன் இரு விழிகள் போல காணப்படுவதாலும் மூன்றாவது துளை சிரிப்பது போன்று உள்ளதாலும் வைரலாகி வருகிறது. புற ஊதா ஒளியில் இருந்து பார்த்தால் சூரியனில் இருண்ட பாகங்கள் கனோல் துளைகள் என அழைக்கப்படுகிறது.
இதை நாசாவின் சோலார் டைனமிஸ் அப்சர்வடரி படம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Edited by Sinoj