லாஸ் வேகாஸில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டெமி-லெய்க் நெல்-பீட்டர் என்ற 22 வயது அழகி வெற்றி பெற்றுள்ளார்.
சமீபத்தில் உலக அழகி போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, உலகின் இரண்டாவது போட்டியான 66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது.
அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த போட்டியில் மொத்தம் 92 நாட்டு கலந்து கொண்டன.
தென் ஆப்ரிக்காவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ள டெமி லெய்க் நெல் பீட்டர் மிஸ் யுனிவர்ஸ் 2017 பட்டத்தை தட்டி சென்றார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்காக கேட்கப்பட்ட கேள்விக்கு, இவர் தன் சொந்த ஊரில் தற்பாதுகாப்புக்காக செய்த செயலை விளக்கினார். அதோடு, பெண்கள் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க தற்காப்பு மிக அவசியம் என்ற அவரின் பேச்சு வெற்றிக்கு பிரதானமாக இருந்தது.
போட்டியில் ஜமைக்கா, வெனிசுலா, தாய்லாந்து மற்றும் கொலம்பியா ஆகிய நாடு அழகிகள் அடுத்தடுத்த இடத்தை கைப்பற்றினர். இந்தியா சார்பில் திவா சாந்தா சசிதர் கலந்து கொண்டார். ஆனால், முதல் 15 அழகிகள் பட்டியலில் கூட இவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.