Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 22 May 2025
webdunia

வெற்றிகரமாக முடிந்த விண்வெளி சுற்றுலா! – பூமிக்கு திரும்பிய நால்வர் குழு!

Advertiesment
World
, ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (11:46 IST)
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமியை வந்தடைந்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக பல நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் தவிர பொதுமக்கள் யாரும் இதுவரை விண்வெளி சென்றதில்லை. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் முதற்கட்டமாக நான்கு பொதுமக்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது ஸ்பேஸ் எக்ஸ். நேற்று அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நான்கு பேருடன் புறப்பட்ட பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தது. 3 நாட்கள் பூமியின் வட்டப்பாதையில் சுற்றிய விண்கலம் திட்டமிட்டபடி ப்ளோரிடா கடற்பகுதியில் பாதுகாப்பாக வந்து இறங்கியுள்ளது. விண்வெளி சுற்றுலாவில் இது ஒரு தொடக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் உற்பத்தியை துவக்கியது சென்னை ஃபோர்டு: திடீர் திருப்பம்